புத்தரின் குடிசை

நீண்ட நாட்கள் ஆயிற்று இந்த பக்கம் வந்து.



வீட்டினில் என்னை தவிர யாரும் இல்லாமல் தனிமையில் உழன்று கொண்டிருந்தேன். அங்கே போகலாமா, அதை செய்து விடலாமா ஒன்று விதமான ஒடிக்கொண்டிருந்த மனதை கட்டுப்படுத்தி வீட்டில் தச்சு மம்மு சாப்பிட்டு விட்டு தூங்கி விடலாம் என சாதத்தை மைக்ரோ வேவ் அவனில் வைத்தேன். வரும் தச்சு மம்மு மட்டும் சாப்பிட்டால் நல்லாயிருக்காது என யோசித்த மனம் ரசம் வைக்கச் சொல்லியது. ரசத்தை வைத்து இறக்கியவுடன் , இருக்கும் ஊறுகாயை வைத்து சாப்பிடலாம் என்று நினைத்து எல்லாத்தயும் எடுத்து வைத்தேன்.  இவ்வளவ்வு பண்ணியாச்சு இன்னும் ஒரு காய் செய்ய முடியாத என்று எண்ணி வீட்டில் கிடந்த நான்கைந்து உருளைக் கிழங்குகளை எடுத்து வேக வைத்து சற்றே மசித்து ஒரு விதமான் பொடிமாசை பண்ணி இறக்கினேன்.

சாப்பிட்டு முடித்தவுடன் தனிமையை விரட்ட வந்த ஆபத்தாந்தவனாக பேரிலக்கியவாதி, கவிதாமணி, இலக்கிய செம்மல் மயில்ராவணன் எழுந்தருளினார்.  வந்தவர் ஒரு பெரிய சூட்கேசை திறந்து ஒரு விதமான பொட்டியை வெளியே எடுத்தார்.. திகைத்து போர் பார்தேன். படம் பார்க்கலமா என்றார் ? தலையசைத்து வைத்தேன். என்ன படம் பார்க்கலாம் என்று அடுத்த கேள்வி வந்து விழுந்தது. ஒரு படத்தின் பேரை சொல்லி அந்த படம் இருக்கா என்றவனிடம் தூ இதெல்லாம் ஒரு பொழப்பா என்றார். செரி செரி விடும் நீரே ஒரு படத்த போடும் என்றேன். அதற்கு அவர் உடனே கருந்தேள் ராஜேசிடம் போன் அடித்து ஏதாவது படம் பேரை சொல்ல சொல்லி கேட்டார். கருந்தேள் துப்பினாரா தெரியாது, உடனை போனை கட் செயதவர் The Proposal என்ற ஆங்கில படத்தை ஒட்ட ஆரம்பித்தார். படம் ஒட ஆரம்பித்த பத்தாவது நொடியில் பக்கத்திலிருந்து குறட்டை சத்தம் காதை கிளிக்க ஆரம்பித்தது. பதறி போய் எழுப்பியவனிடத்தில் சாரி மாப்பிள உண்ட மயக்கம் என்றார். உடனே ஒரு அருமையான பில்டர் காஃபியுடன் அவரை எழுப்பினேன்.

குடித்து முடித்தவுடன் நான் இந்த படம் வேணாம்னு சொன்னேன். உடனே ஒரு நான் கவிதை சொல்லவா என்றார். நான் விக்கி விக்கி அழ ஆரம்பித்த உடனே , என்னை சமாதான படுத்த The Broken Arrow என்ற படத்தை ஒட்ட ஆரம்பித்தார். படம் ஒடி முடிந்தவுடன் என்ன மாம்ஸ் இந்த படத்துலயும் ஒன்னுமே இல்லை என்றேன். அதை லாஸ்ட் சீன்ல கிஸ் அடிச்சாங்கள்ல மாப்பிள அம்புட்டுதான் என்றார்.

இன்னும் சிறிது நேரம் தமிழ் இலக்கிய சூழலை பற்றி அலசி ஆராய்ந்தோம். சிறிது நேரம் களித்து இன்னொரு உலகப் பதிவரான திரு.கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் அவரது வீட்டிற்கு அழைத்தார். உடனே நான் மயில் மீதேறி அவரது வீட்டை அடைந்தோம்.  அவரது வீட்டினில் சுண்ட காய்ச்சிய பாலில் காஃபி கலந்து ஆளுக்கு ஒரு படி கொடுத்தார் அவரது மனைவி. அதை குடித்து முடித்துவிட்டு சிறிது நேரம் உலகப் படங்களின் இன்றைய போக்கை அலசி ஆராய்ந்தோம். என்ன இருந்தாலும் இந்த நோலன் இபப்டி படத்தை ஒச்சிருக்க கூடாது பாஸ் என்றார் மயில் மாம்ஸ். அதற்கப்புறம் அவர் பேச நாங்க கேட்க, நாங்க கேட்க அவர் பேச என மயில் மாம்ஸ் ஒரு ஒரு மணி நேரத்தை எடுத்துக்கொண்டார்.

பின்னர் கார்த்திகேயன் வீட்டில் இருந்து கிளம்பி, இந்த இடத்திற்கு வந்து சேர்ந்தோம்.


இந்த இடம் ஒரு ரெஸ்டாரண்ட்.. அருமையான சான்விட்ச்களை செய்து தருகிறார்கள். பம்மலுக்கும் பல்லாவரத்திற்கும் நடுவில் நல்லதம்பி ரோட்டிற்கு அருகில் உள்ளது.  இது நணபர் கார்த்திகேயனின் நண்பர் ராஜகோபால் அவர்களால் நடத்தப்படும் ரெஸ்டாரண்ட்.  அருமையான உணவு மக்கா... அதை விட அந்த இடம் .. பல விதமான புராதான பொருட்களால் அருமையாக அலங்கரித்து நல்ல ஒரு விதமான இயற்கை சூழலில் மிக அருமையாக இருக்கிறது இடம்.. நல்ல மெல்லிசை ஒடிக்கொண்டிருக்கிறது உடம்பை தளுவும் மென்காற்றைப் போல..

நேரம் கிடைத்தால் ஒரு முறை சென்று பாருங்கள்.

மேலும் சில படங்கள்.








க ரா

க ரா

புத்தகங்களை வாசிப்பதில் விருப்பமுள்ள எளிய மனிதன். சும்மா கிறுக்கி பார்க்கிறேன்.

3 கருத்துகள்

உங்கள் கருத்து என்னை உற்சாக படுத்தும்.

  1. முதல் வடை ... ஸாரி சாண்ட்விச் எனக்கே ;-)

    பதிலளிநீக்கு
  2. அருமையான பகிர்வு.

    நன்றி,

    தொடருங்கள்.

    தங்கள் பதிவை திரட்டிகளில் இணைத்துவிட்டீர்களா?

    மாப்ள மயில்ராவணனைக் கேட்டதாகச் சொல்லவும்.

    கீதப் பிரியன் நலமா?

    வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  3. எளிதாக இருக்கிறதே தொடருங்கள் !

    பதிலளிநீக்கு
புதியது பழையவை

தொடர்பு படிவம்