பிறவிப்பெருங்கடன்






செந்தமிழ் செல்வியிடம்
காதலை சொல்ல
ஏன் யோசித்திருந்தேன்
என்று நினைவில்லை
சொல்ல நினைத்த
அந்த நாளில்
அவள் செல்வியாக இல்லை

அலுவலகத்தில்
பக்கத்து இருக்கை
வளர்மதி வெளியே
கூப்பிடுகையில்
ஏன் என்றே
புரிந்ததில்லை
எதிர் இருக்கை
ஜெயராஜ்
வளர்மதியுடன்
கல்யாணம்
என்று சொல்லும்வரை

முப்பது வயதில்
பெண் பார்க்கவா
என்று அம்மா
கேட்ட போதாது
இசைந்திருக்கலாம்
தலையில் முடியாது
இருந்தது


கடலைக்குடி ஜோசியன்
சொல்லியிருக்கிறான்
கட்டாயம் இரண்டு
திருமணமென்று
ஒன்றாவது நடக்கிறதா
பார்க்கலாம்
வயது நாற்பதாகிறது.

இராமசாமி கண்ணன்.

க ரா

புத்தகங்களை வாசிப்பதில் விருப்பமுள்ள எளிய மனிதன். சும்மா கிறுக்கி பார்க்கிறேன்.

5 கருத்துகள்

உங்கள் கருத்து என்னை உற்சாக படுத்தும்.

  1. நன்றி சித்ரா.. எபப்டி இருக்க்கிங்க....

    பதிலளிநீக்கு
  2. ஏன் மாப்ள.இவ்ளோ சோகம் கவிதைல.பெரும்பாலும் மணமாகாத பெண்கள் சோகத்த தான் அநேகம் கவிஞர்கள் பதிவு செஞ்சிருக்காங்க.நீங்க தான் முதல்முறையா ஆண்வர்க்க சோகத்த பதிவு செஞ்சிருக்கீங்க :)

    பதிலளிநீக்கு
  3. கடலைக்குடி ஜோசியன்
    சொல்லியிருக்கிறான்
    கட்டாயம் இரண்டு
    திருமணமென்று
    ஒன்றாவது நடக்கிறதா
    பார்க்கலாம்
    வயது நாற்பதாகிறது.

    நாற்பது வயசு வரை போட்ட கடலை எல்லாம் வீணா..
    தாடி இருக்கு.. மூக்கு, முழி எல்லாம் காணோமே..

    சோகம் கூட ஜாலியாய் கவிதையாகி விட்டது..

    பதிலளிநீக்கு
  4. ரிஷபன் இந்த கேரக்டருக்கு கடலை போட தெரியாததுனாலத்தான் நாப்பது வயசாகியும் கல்யாணம் ஆகல...

    நன்றி தொடர் ஊக்கத்துக்கு....

    பதிலளிநீக்கு
புதியது பழையவை

தொடர்பு படிவம்