Abandoned 2010 --- ஆங்கிலம்


 மேரி வால்ஸ் ஒரு வங்கியின் மேனேஜர். சில மாதங்களுக்கு முன்னாடி தன் தாயை இழந்தவர்.  முக்கியமாக ஒரு அழகிய இளம்பெண்.  கெவின் பீட்டர்சன் என்ற பீரிலான்ஸ் கன்ஸ்டல்னடுடன் நான்கு மாதமாக காதலில் வி(ழ்)ழுந்திருப்பவர்.   தன் காதலனின் கால் அறுவை சிகிச்சைக்கு வேண்டி அவரை மருத்துவமனையில் விட்டு விட்டு திரும்பியும் அவரை கூட்டிச்செல்ல வேண்டி மருத்துவமனைக்கு வருகிறார்.   அறுவை சிகிச்சைக்கு ஒரு மணி நேரம் முன்னாடி வரை அவருடன் இருந்துவிட்டு , முடியும் தருவாயில் காதலனை பார்க்க திரும்பி வருகிறார்.

திரும்பி வந்து பார்கையில் காதலனை கானாமல்  , அந்த மருத்துவமனை முழுக்க தேடுகிறார். மருத்துவமனை கணிணியிலும் அவரது காதலனை பற்றிய ஒரு தகவலும் இல்லை என்கின்றனர்.  அத்துடன் அவரது காதலனின் அறுவை சிகிச்சையை செய்யும் அந்த டாக்டரும் அன்றைய தினம் விடுப்பில் இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது மருத்துவமனையின் நிர்வாகத்தினால்.  அவரது காதலைன அட்டன் செய்த நர்ஸின் பெயரை சொன்னால் அப்படி ஒரு நர்ஸ் அங்கே வேலை செய்ய வில்லை என்கின்றனர். 

மேரி வால்ஸின் குழப்பமான தகவல்களையும் , செய்லகளையும் கானும் மருத்துவமனை நிர்வாகத்தினர் , ஒரு போலிஸ் டிகட்டிவை வர வழைக்கின்றனர்.  அவரும் மேரி வால்ஸிடம் பேசிய பின்  அவரும் அந்த மருத்துவமனை முழுதும் அலசிப்பார்த்தும் , மேரி வால்ஸ் சொன்ன மனிதனை பற்றி ஒரு தகவலும் கிட்டாமல் போகிறது.  இதற்கிடையில் மேரி வால்ஸின் ந்டவடிக்களை கண்டு அவ்ரை ஒரு மனநோய்  மருத்துவரை விட்டு டெஸ்ட் செய்கிறது மருத்துவமனை நிர்வாகம்.  

இதற்கிடையில் மேரி வால்ஸ் அவள் சொன்ன காதலினின்  சோசியல் செக்கூயிரிட்டி எண்ணும் வேரு ஒரு பெண்ணின் சோசியல் செக்கூயிரிட்டி எண்ணாக இருக்கிறது.  மொத்ததில் மேரி ஒரு ந்டக்காத சம்பவத்தை பற்றி சொல்வதாக அனைவரும் நினைகின்றனர். ஆனால் மேரியோ தான் சொல்லும் அத்தனையும் நிஜம் என்று திரும்ப திரும்ப சொல்கிறார். இதற்கிடயில் கெவினின் லேப்டாப் தனது காரில் இருப்பது நினைவுக்கு வர பார்க்கிங்க் லாட்டில் உள்ள தனது காரில் சென்று பார்ப்பதில் அதுவும் இல்லாமல் போக மிகவும் குழம்பி போகிறார்.

இதற்கிடையில் அவர் சொல்வது நிஜம் என்று சொல்வதினால் அவரது காதலனை கண்டு பிடிக்காமல் , அவரால் அந்த மருத்துவமனைய விட்டு வெளியேற மருத்துவமனை நிர்வாகமும், போலிஸ் டிடெக்டிவ்வும் தடை விதிக்கிறார்கள். இடையில் காதலனும் போன் செய்து தான் ஒரு சிக்கலில் மாட்டியிருப்பதாகவும், தன்னை சிலர் கடத்தி அந்த மருத்துவமனையில் வேறு ஒரு பகுதியில் வைத்து துன்புருத்துவதாகவும் சொல்ல , மேரியின் டென்சன் எகிறுகிறது. மருத்துவமனை பாதுகாவலர்களின் கண்ணில் மண்ணை தூவி தப்பித்து, காதலனை காண ஒடும்போது ஒரு கார் மோதி மேரி காயமுற, அந்த மருத்துவமனயிலேயே அவர் அட்மிட் செய்யப்படுகிறார்.மருத்துவமனை பெட்டில் மேரி இருக்க அவரை பார்க்க ஒரு மனிதர் வருகிறார்.

நிற்க...

நான் முழு கதையையும் சொல்லி விடுவேன் போலிருக்கிறது.. மேரியை சந்திக்க வரும் அந்த மனிதன் யார் ? .. . மேரியின் காதலன் கிடைத்தானா. ?. உண்மையிலேயே மேரி சொன்ன அடையாளங்களுடன், பேருடன் ஒரு மனிதன் இருக்கின்றானா ? ...   நீங்கள் இந்த மாதிரி ஒரு சூழ்நிலையில் இருந்தால் உங்கள் துடிப்பு எப்படி இருக்கும்.. அந்த துடிப்பை உணரவும் , மேல் உள்ள கேள்விகளுக்கு பதில் தெரியவும் கண்டிப்பாக படத்தை பாருங்கள்.

டிஸ்கி 1 :

இந்த் படத்தில் நடித்த அந்த இளம்பெண்ணை பற்றி அறிய இங்கே சொடுக்கவும்.

டிஸ்கி 2 :

ஒரு சோகமான செய்தி அந்த இளம்பெண் இப்போது உயிருடன் இல்லை.



அன்புடன்,
இராமசாமி கண்ணண்.

க ரா

புத்தகங்களை வாசிப்பதில் விருப்பமுள்ள எளிய மனிதன். சும்மா கிறுக்கி பார்க்கிறேன்.

17 கருத்துகள்

உங்கள் கருத்து என்னை உற்சாக படுத்தும்.

  1. நண்பா
    அட்டகாசமா எழுதிருக்கீங்க.படம் விரைவில் பார்ப்பேன்,அந்த பெண் உயிரோட இல்லையா?அடடா,என்ன கொடுமை?
    ஹாலி பாலி பதிவுகள் ஒவ்வொன்றாக மீள்பதிவிடப்போகிறேன்.மனிதர் அப்போதாவது பதிவுலகத்துல நம்மை நினைக்கிறாங்கன்னு திரும்ப வர யோசிக்கட்டும்.

    பதிலளிநீக்கு
  2. இப்படி பாதில அபாண்டண்டா:( அவ்வ்வ்..

    பதிலளிநீக்கு
  3. நல்லா எழுதியிருக்கீங்க பாஸ்.

    தலைப்பும் அப்பெண் வாழ்வும்

    பதிலளிநீக்கு
  4. மாப்ள என்ன இது? இது 1987ல வந்த ஒரு ஜப்பானிய திரைப்படத்தோட அட்டக்காப்பி. அதோட இதே ஸ்டோரிலைன நம்ம கமல் கூட ‘மன்மதன் அம்பு’ல யூஸ் பண்ணியிருப்பாரு.

    பதிலளிநீக்கு
  5. சொல்ல மறந்துட்டேன்... உங்க விமர்சனம் இளம்பெண் ஸாரி ஸாரி.. படம் பார்க்க தூண்டுகிறது :)

    பதிலளிநீக்கு
  6. அட! படத்தை பார்க்கும் ஆவல் வருகிறதே! அறிமுகத்திற்கு நன்றி ராம்.

    பதிலளிநீக்கு
  7. பாக்கணும். நல்ல விமர்சனம்.

    பதிலளிநீக்கு
  8. விமர்சனம் நல்லாருக்கு.. அந்தப்பெண் இல்லையென்பதுதான் சோகமா இருக்கு .. கண்டிப்பா படம் பாக்குறேன்..

    பதிலளிநீக்கு
  9. அனைவரின் க்ருத்துக்கும் நன்றி :)

    பதிலளிநீக்கு
  10. நல்ல விமர்சனம்..... படம் பார்க்கின்றேன்

    பதிலளிநீக்கு
  11. பிரிட்டானி மர்ஃபி படங்கள் சில பார்த்திருக்கிறேன்... இவரது முகத்தில் ஒரு வில்லத்தனம் குடியிருக்கும். ஆனால் அழகும் இருக்கும்.. நல்ல நடிகை..

    பதிலளிநீக்கு
  12. ரொம்ப இண்டரஸ்டிங்கா சொல்லிட்டு பாதியிலேயே விட்டுட்டீங்களே கண்ணன்..:((

    பதிலளிநீக்கு
  13. எலேய்....

    அங்கன ஒரு பாரா, இங்கன ஒரு மரா, இரா, எறா, சொறா-ன்னுகிட்டு. என்னலே நடக்குது??

    மொதல்ல ஆளுக்கு ஒரு பதிவெழுதி.. அதுல 1000 கமெண்ட் போட்டாதான் அடங்குவீயலோ?

    பதிலளிநீக்கு
புதியது பழையவை

தொடர்பு படிவம்