கால இயந்திரத்தில் ஒரு பயணம்

நம்ம நண்பர் சிரிப்பு போலிஸ் ரமேஷ வலைஉலகத்தின் கிரியேட்டிவ் தல பிரியமுடன்.. வசந்த் சும்மா இல்லாம ஒரு தொடர் பதிவுக்கு  கூப்பிட நண்பனும் வேற வழியில்லாம இப்படி ஒரு பதிவ போட்டு தாக்கி கடைசில என்னயும் ஒரு பதிவ போட சொல்லிடாப்ல. அவர் என்னைய எழுத சொன்னது என்னானா

உங்களுக்கு ஒரு கால இயந்திரம் கிடைக்குது. அதுல ஏறி நீங்க பிறக்குறதுக்கு முன்னால எதோ ஒரு வருசத்துக்கு போகணும். எந்த வருசத்துக்கு போவீங்க. என்ன பண்ணுவீங்க. உங்களுக்கான தலைப்பு "கால இயந்திரம்" .

பய புள்ளைக்கு அப்படி என்ன கோபமோ நம்ம மேல.  ஆனா பாருங்க இதுல மாட்டிகிட்டு தினறுறது நீங்கதான். என்னத்த எழுதறதுன்னு ரோசன பன்னுனதுல இப்படி எழுதிபுட்டேன் பார்த்துகுங்க.

சாதியில்லை
மதமுமில்லை
மனித மனதில்
அன்பு மட்டுமுண்டு

சண்டைகளில்லை
இன்னல்களில்லை
மனித மனதில்
மனிதத்திற்கோர் இடமுண்டு

ஏமாற்றுபவர் இல்லை
ஏமாறுபவரும் இல்லை
மனிதரிடையில்
நேர்மை என்றொரு குணமுண்டு

கவலைகள் இல்லை
கபடங்கள் இல்லை
மனித மனதில்
மகிழ்ச்சி மகிழ்ச்சி மட்டுமுண்டு

ஏழையில்லை
பணக்காரனுமில்லை
மனிதரிடத்தில்
எல்லோரும் சமம்
என்றோர் எண்ணமும் உண்டு

நான் இல்லை
நீ  இல்லை
மனிதரிடத்தில்
நாம் என்னும் எண்ணம்மட்டுமே உண்டு


அப்படியோர் காலமும்முண்டோ
கண்டவர்கள் சொல்லுங்கள்
என் கால இயந்திரத்தில்  
நமக்கோர் பயணமும் உண்டு

அவ்வளவ்வுதான் மக்கா நம்மளுக்கு தோனுனது. நம்ம கிரியேட்டிவ் தல சும்மா இல்லாம இதுல ஒரு சட்டம் (Rule) போட்ருக்காப்ல. என்னன்னா இன்னும் ரெண்டு பேத்த தொடர் பதிவெழுத நம்ம கோத்து விடனுமாம்(என்னா வில்லத்தனம்). தலயாச்சே பேச்ச கேக்காம இருக்க முடியுமா சொல்லுங்க.

நான் கூப்பிட போற அந்த ரெண்டு பேரு யாருன்னா.

முத பலி

நம்ம தானை தலைவி டாக்டர் வெட்டிப்பேச்சு சித்ராக்காதான்( நாங்களாம் யூத்துல). திடிர்னு நம்ம கடவுள் சார்வாள் உங்க முன்னாடி வந்து மறுபடியும் நீங்க உங்க வாழ்க்கைய குழந்தை பருவத்துல இருந்து ஸ்டார்ட் பன்னி புச்சு புச்சா எதுனாச்சும் பன்னிக்கலாம் அப்படின்னு ஒரு வரம் கொடுத்தா என்ன என்னலாம் பண்ணலான்னு நீங்க நினைப்பீங்க. உங்களுக்கு உண்டான தலைப்பு “ மீண்டும் குழந்தை பருவத்திலிருந்து”.

ரெண்டாவது பலி

காமிக்ஸ் புடிக்கும்ல ஜெய் உங்களுக்கு. உங்களுக்கு கடவுள் ஒரு காமிக்ஸ் கேரக்டரா மாறுறதுக்கு சாய்ஸ் கொடுக்கறார்னு வெச்சுகங்க. நீங்க எந்த காரக்டர சூஸ் பன்னுவீங்க. ஏன் அப்படின்னு எழுதறீங்களா.  மாட்டி விட்டதா நினச்சுகாம கொஞ்சம் எழுதுங்க.

க ரா

புத்தகங்களை வாசிப்பதில் விருப்பமுள்ள எளிய மனிதன். சும்மா கிறுக்கி பார்க்கிறேன்.

13 கருத்துகள்

உங்கள் கருத்து என்னை உற்சாக படுத்தும்.

  1. நண்பா அருமை. அழைத்தது எழுதியதற்கு தேங்க்ஸ். பாட்டாவே பாடிட்டியா. அப்புறம் நானும். இடையில மானே தேனே போட்டிருக்கலாம்ல.

    ஆனா அதெல்லாம் நிஜம்.
    //மனிதரிடத்தில்
    நாம் என்னும் எண்ணம்மட்டுமே உண்டு//
    இப்ப கிராமங்கல்லையே வெட்டு குத்துன்னு ஆயிடுச்சு நண்பா. மனித மனங்கள் சுருக்கி போயிடுச்சு

    பதிலளிநீக்கு
  2. இப்படி பயணம் போக முடிஞ்சா சுகமோ சுகம்:)

    பதிலளிநீக்கு
  3. உங்கள் கற்பனை அருமை.
    சித்ரா ட்யூடில சேர்ந்தாச்சா?
    பதிவுக்காக வெயிட்டிங்.

    பதிலளிநீக்கு
  4. நல்ல கவிதைதான்.. சித்ராவையும், ஜெ வையும் வரவேற்கிறேன்...

    பதிலளிநீக்கு
  5. நானும் ப்ரெசண்ட் சார்... ஆனா, கேள்வி அவுட் ஆஃப் சிலபஸ்... :( காமிக்ஸ் பத்தி எல்லாம், நம்ம நண்பர்களோட வலைப்பதிவுல படிச்சப்பறம்தான் தெரிஞ்சது சின்ன வயசுல காமிக்ஸ் படிக்காம எவ்வளவு மிஸ் பண்ணியிருக்கேன்னு...

    நிஜமாதாங்க...
    http://www.karundhel.com/2010/04/xiii-1.html
    இதுல என்னோட பின்னூட்டத்தை பாருங்க..

    ஏதோ நாலு காமிக்ஸ் கேரக்டர் ஃபோட்டோவைக் காட்டி, இதுல எது நல்லா இருக்குன்னு கேட்டீங்கன்னா சொல்லுவேன்.. :) :)

    பதிலளிநீக்கு
  6. அருமை கண்ணன்.. கொடுத்திருக்கிற தலைப்பு கிரியேட்டிவா இருக்கு கங்ராட்ஸ் ,, தொடர்ந்து சிறப்பா எழுத வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  7. எப்படியால்லாம் யோசிக்கிறாங்க ???? நடக்கட்டும் , நடக்கட்டும்

    பதிலளிநீக்கு
  8. /////ஏழையில்லை
    பணக்காரனுமில்லை
    மனிதரிடத்தில்
    எல்லோரும் சமம்
    என்றோர் எண்ணமும் உண்டு///////


    எனது எதிர்பார்ப்பும் இதுதான் நண்பரே . மிகவும் அருமையாக எழுதி இருகிறிர்கள் . தொடர் பதிவில் இது ஒரு புதுவிதம்தான் . பகிர்வுக்கு நன்றி .

    பதிலளிநீக்கு
புதியது பழையவை

தொடர்பு படிவம்