துணை

நான் கணேசன்.  நான் இந்த நகரத்தில் உள்ள ஒரு பலசரக்கு மொத்த வியாபர நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஒரு சாதரண மனிதன். நியாயமாக சொன்னால் நான் கூலி அல்லது ஒரு நாய், நன்றியுள்ள நாய். நான் பிறந்து ஐந்து வயதிலெல்லாம் என் தாய் என்னை விட்டி பிரிந்து விட்டால் அல்லது இறந்து விட்டால்.  என் தந்தை எனக்கு ஒரு கேள்வி குறிதான். ஆம் எனக்கு என் தந்தை யாரனெ தெரியாது. நான் வேலை பார்க்கும் நிறுவனத்தின் முதலாளிகளின் யாரவது இருக்க கூடும் என்பது என் அனுமானம். ஏன் எனில் என் தாய் இறந்தவுடன் என் உறவினர்களில் யாரோ ஒருவரால் நான் இங்கே கொண்டு வந்து நிறுத்தப்பட்டேன்.

அன்றிலிருந்து இங்கேதான் இருக்கிறேன். இருக்க இடம் மூன்று வேலை உணவு , உடுத்த துணி(ஏற்கனவே யாரவது உபோயகப்படுத்தியது) இதுதான் சம்பளம். வேலை பார்க்கும் இடத்திலேயே தங்கி கொள்ள வேண்டியதுதான். அதுக்கும் ஒரு நாள் வேட்டு வைத்த மாதிரி நடந்தது ஒரு சம்பவம். முதலாளிகளின் ஒருவரின் மகனை அண்ணா என்று கூப்பிட போக உறவு முறை வேண்டுதாட உனக்கு என்று அடித்து துரத்தப்பட்டேன். துரத்தினாலும் சுவத்தில் எறியப்பட்ட பந்தை போல திரும்பி வந்தேன் துரத்திய இடத்திற்கே. ஏன் என்றால் எனக்கு வேற போக்கிடம் இல்லாமல் இருந்ததுதான்.

திரும்பி வந்த எனக்கு வேலை செய்ய அனுமதி கிடைத்தது வெளியில் எங்காவது தங்கி கொள்ள வேண்டும், சம்பளமாக உடுத்த துணியும் , சாப்பிட உணவும் கிடைக்கும் போன்ற நிபந்தனைகளுடன். அதிலிருந்து தங்குமிடம் பிளாட்பாரம் ஆனது. வேலை செய்த களைப்புடன் இருப்பிடத்தில்(பிளாட்பாரம்) தூங்கி கொண்டிருந்த ஒரு இரவு அந்த சம்பவம் நடந்தது. தூங்கி கொண்டு இருந்த பொழுது யாரோ யாரையோ துறத்திக்கொண்டு ஒடுவது மாதிரி  இருந்தது. சிறிதி நேரம் கழித்து வெட்டுங்கடா அவன என்ற குரல்களுடன் பல பேர் சேர்ந்து ஒருவனை வெட்டுவது கேட்டது. சிறிது நேரம் கழித்து “ தண்ணி தண்ணி” என்று குரல் கேட்க எந்திருத்து பார்க்க ஒரு மனிதன் உயிருக்கு போராடி கொண்டிருந்தான். அவன் அதுவாக மாற ஆரம்பித்த தருணத்தில் ஏதோ ஒன்று என்னை ஊன்றி தள்ள எப்படியோ அந்த மனிதர் காப்பற்ற பட்டார்.

அடுத்த சில தினங்களில் வாழ்கையின் முதன் முதலாக ஒரு நட்பு ஏற்பட்ட தருணங்கள் அது. அந்த மனிதர் தோழர் ஆறுமுகம் என்ற ஒரு கம்யூனிஸ்ட் பிரமுகர். அவர் கற்று தந்த பல விசயங்களில் நான் ஒரு மனிதனாக உறுமாற தொடங்கினேன். அவர் என்னை நான் வேலை பார்த்த இடத்தில் இருந்து வர சொன்னாலும் அவர் சொல்லி நான் கேட்காமல் போன ஒரு விசயம் அது. திரும்பியும் சில மாதங்களில் தோழரின் மேல் மற்றொரு தாக்குதல். அதிலிருந்து எப்படியோ அவர் காப்பற்றப்ட்டு அராசாங்க மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.  தோழரை பார்க்க மருத்துவமனைக்கு போன ஒரு நாளில்தான் நான் அவளை பார்க்க நேர்ந்தது. 

மருத்துவமனையில் யாரிடமோ அவள் கத்தி பேசிகொண்டிருப்பதை பார்த்த போது என்னவோ அவள்யே பார்த்து கொண்டு இருக்க வேண்டும் என்று தோண்றியது. என் மனது ஒரு பெண்ணை நோக்கி ஈர்கப்பட்டது அப்போதுதான். யாரோ தன்னை உற்றுப்பார்பதை உணர்ந்த அவள், “ என்ன வேணுமா. போலாமா, எம்முட்டு வெச்சுருக்க” என்று என்னை பார்த்து கத்த அதிர்ந்து போன நான் வேறு வழி பார்த்து நடக்க தொடங்கினேன் இல்லை ஒடினேன் என்பதே சரி. சிறிது தூரம் வந்த பிறகும் அவளின் குரல் காதில் கேட்டு கொண்டே இருந்தது. கேட்பது சிறிது நாள் நீடிக்க வேலை நேரத்தில் என்னை மறந்து நான் ஒரு ஒலி எழுப்ப “ வேலை நேரத்தில் என்ன நாயி சிரிப்பு வேண்டி கிடக்கு. ஒழுங்கா வேலையா பாரு”என்று அதட்டல் வர சிரிப்பு என்ற ஒரு விசயத்தை உணர்ந்த முதல் தருணம் அது. அதன் பிறகு வந்த சிறிது நாட்களில் அடிக்கடி சிரிப்பது என்பது ஒரு சுக்மாகி போனது எனக்கு.

இப்பொழுது எனது இருப்பிடம் தோழரின் கட்சி ஆபிஸாக இருந்தாலும் படம் பார்க்க எண்ணம் வரும்போது தியேட்டரின் பின்னர் இருந்த மரத்தின் அடியில் உறக்கம் என்பது வழக்கமாகி போனது. கையில் படம் பார்க்க காசு இல்லாததாலும் மரத்தடியில் தியேட்டரில் வரும் ஒலி நல்லா கேட்பது போதுமானதாக மரத்தடி உறங்குமிடம் ஆகும் அவ்வப்போது. அந்த மாதிரியான் ஒரு இரவில் தியேட்டரில் இருந்து ஒலித்த ஒரு காதல் பாடல் ஒன்று என்னை மறந்து அவளின் நினைவில் என்ன தள்ளி அந்த பொழுதை ஏகாந்தமாக்கியது. அந்த நினைவுகளில் இருந்து வெளிவராமல் உறங்கிபோன என்னை “ ஏ. நீ என்ன இங்க வந்து தூங்கிட்டு இருக்க. எந்திருச்சு எங்காயாது போ” என்ற குரலில் திடுக்கிட்டு எழுந்து நான் கண்டது அவளைதான். 

தொடர்ந்து வந்த சில பல சந்திப்புகளில் மிக நெருக்கமாக அவளை நானும், என்னை அவளும் உண்ர துடங்கிய அந்த பொழுதுகள் நான் என்னையே ஒரு ஆண் என உணர தொடங்கியது அப்போதுதான். ஒரு மழை விட்ட பின்னிரவில்  , ஒரு ஈரம் இல்லாத இடமாக தேர்ந்து எடுத்து இருவரும் ஒதுங்கிய நேரத்தில் எங்களது முதல் கூடல் நடந்தேறியது. என் வலிகள் நான் மறந்து, அவள் வலிகள் அவள் மறந்து நாங்கள் இருவரும் ஒன்றாக ஆரம்பித்தது அதற்கு பிறகுதான். இதற்கு நடுவில் தோழரும் ஒரு விபத்தில்(விபத்து எனதான் பதியப்பட்டது) மறைய என்னை துளி கூட கலங்கவிடாமல் செய்தது அவள்தான். அடுத்து சிறிது நாட்கள் களித்து நடந்த ஒரு கூடலின் முடிவில்  நான் அவளிடம் திருமணத்தை பற்றி பேச அவள் பந்தம் இல்லாமல் இருப்பதே நல்லது என சொல்லி மறுக்க எங்களுக்குள் வந்த முதல் ஊடல் இது.

அதன் பிறகு அவள் சிறிது நாட்கள் காணமல் போனாள் . அவள் இல்லாத தனிமையில் உடல் வெப்பத்தை போக்க வேரு ஒரு இடம் தேடியதில் வந்த வினை உடல் வெப்பத்தை கூட்டியே போனதில் சுருங்கிப்போனேன். அரவனைக்க யாருமில்லாமல் ,  மருத்துவமனையே உறங்குமிடம் ஆகிப்போனது. சீண்டுவார் யாருமில்லாமல் நான் ஒரு நோய் வந்த நாயாகிப்போனேன். உடலின் வெப்பம் தாங்க முடியாமல் நான் முனங்கி கொண்டிருந்த ஒரு பொழுதில் என் மேல் விழுந்த ஒரு கண்ணிர் துளி அவளுடையாதிருந்தது. கோடை காலத்தில் பூமியின் வெப்பத்தை தனிக்க வந்த மழையை மாதிரி என் உடலின் வெப்பத்தை தணிக்க என் மேல் விழுந்த அவளின் அந்த கண்ணிர் துளி போதுமானதாக இருந்தது.


க ரா

புத்தகங்களை வாசிப்பதில் விருப்பமுள்ள எளிய மனிதன். சும்மா கிறுக்கி பார்க்கிறேன்.

10 கருத்துகள்

உங்கள் கருத்து என்னை உற்சாக படுத்தும்.

  1. இப்பல்லாம்.. புனைவு, கதையெல்லாம் எழுதினா.. அந்த ஏரியா பக்கமே நான் போறதில்லீங்க தல.

    என்ன உள்குத்து வச்சி எழுதறீங்கன்னே புரிய மாட்டேங்குது! :)

    பதிலளிநீக்கு
  2. நல்ல கதை என்றாலும் முடிக்க ஒரு அவசரம் ஏன்.. மேலும் தோழர், அநாதை, விபச்சாரி நல்ல கதாபாத்திரங்கள்.. இதே களனை கொண்டு மீண்டும் வேறு வடிவில் எழுதுங்கள், கதையோ, கவிதையோ உடனே பதிவிடாமல் எழுதி சில நாட்கள் கழித்து அதனை மீண்டும் திருத்தி பதிவிடுங்கள்..
    உங்களுக்குள் ஒரு தேர்ந்த எழுத்தாளன் ஒளிந்திரிக்கிறான்....

    பதிலளிநீக்கு
  3. This is probably the best of your posts...

    // அவன் அதுவாக மாற ஆரம்பித்த தருணத்தில் ஏதோ ஒன்று என்னை ஊன்றி தள்ள எப்படியோ அந்த மனிதர் காப்பற்ற பட்டார் //
    நல்ல எழுத்துநடை..

    // சிரிப்பு என்ற ஒரு விசயத்தை உணர்ந்த முதல் தருணம் அது //
    கதாபாத்திரத்தை நல்லா அனுபவிச்சாதான் இப்படி தோணும்... சூப்பர்..

    துலி, அவளுடையாதிருந்தது - ஒன்னு ரெண்டு எழுத்துப்பிழை இருக்குன்னு நினைக்கிறேன்.. சரி பண்ணிடுங்க...

    பதிலளிநீக்கு
  4. நல்ல கருத்துள்ள கதைங்க. அருமை.

    பதிலளிநீக்கு
  5. பட்டி பார்த்தா இன்னும் கச்சுன்னு இருக்கும். நல்லாருக்கு கண்ணன்:)

    பதிலளிநீக்கு
  6. @ ஹாலி பாலி : நன்றி தல.இந்த பாலிடிக்ஸல்லாம் நமக்கு வராது தல. தைரியமா வந்து படிச்சுட்டு கருத்து சொல்லிட்டு போங்க.

    @ கே.ஆர்.பி.செந்தில்
    நன்றி செந்தில். நீங்க சொன்னத செய்ய முயற்சி செய்றேன்.

    @ ஜெய்
    நன்றி ஜெய்.

    @ சித்ரா.
    நன்றிங்க தொடர் ஊக்கத்துக்கு.

    @ ரமேஷ்.

    நண்பா நன்றி.

    @ வானம்பாடிகள்

    ஐயா நன்றிங்க கருத்துக்கு. இந்த பட்டி தட்றதுதான் எனக்கு இன்னும் புரிபடல. திருத்திக்கிறேன் சீக்கிரமே.

    பதிலளிநீக்கு
  7. நல்லாருக்கு ஆர். கே.

    'deeppest thougts leads there' என்பார்கள்.

    அப்படி,

    கே.ஆர்.பி. செந்தில் சொல்வது போல் அருமையான எழுத்தாளன் உங்களில் இருக்கிறார்.

    sharp பண்ணுங்க, போதும்.

    ரொம்ப பிடிச்சிருக்கு மக்கா.

    பதிலளிநீக்கு
  8. ஒரு காதல் கடிதம் எழுதும்போது எவ்வளவு கழித்தல் வார்த்தைகளில் வாக்கியங்களில் இருக்குமோ அத்தனை எடிட்டிங் ஒரு படைப்பிலும் வேண்டியதாகிறது . உங்களுக்குள் இருக்கும் இருக்கும் படைப்பளனின் வீச்சு இந்தக் கதையில் தெறிக்கிறது .இன்னும் கொஞ்சம் செதுக்குங்கள் கண்ணன்.மிக நல்ல படைப்புகள் வெளிவரும் உங்களிடம் இருந்து என்று நம்புகிறேன்

    வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  9. நல்லா இருந்தது கதையின் உட்கரு எங்கே?

    பதிலளிநீக்கு
புதியது பழையவை

தொடர்பு படிவம்