கவிதைகள் மூன்று.

1. 

தோற்றுப் போகும் 
கிரிக்கெட் மேட்ச்சுகளிலும்
 வெள்ளி விழா நாயகர்கள் 
பேசும் திரை வசனங்களிலும்
அரசியல்வாதிகளின்
அற்புத அறிக்கைகளிலும்
ஒளிந்துக்கொண்டிருக்கின்றன
நேஷனல் ஸ்பிரிட்டும்
தேசத்தின் வளமும்

2.
கேதன் தேசாயின் 1800 கோடி
ராமலிங்க ராஜுவின் 10,000 கோடி
 ஐ.பி.எல் மோடியின்`xxxx கோடி
வளர்ந்துக்கொண்டுதான் இருக்கின்றது
தேசத்தின் பொருளாதாரம்

3.
சினிமா டிக்கெட் 200 ரூபாய்
பெட்ரோல் 52 ரூபாய் லிட்டருக்கு
குவாட்டர் பிராந்தி 70 ருபாய்
ஹோட்டல் சாப்பாடு 50 ரூபாய்
கட்டுக்குள்தான் இருக்கிறது
தேசத்தின் விலைவாசி


 


 

க ரா

புத்தகங்களை வாசிப்பதில் விருப்பமுள்ள எளிய மனிதன். சும்மா கிறுக்கி பார்க்கிறேன்.

18 கருத்துகள்

உங்கள் கருத்து என்னை உற்சாக படுத்தும்.

  1. நல்ல சாடல்... தொடர்ந்து எழுதுங்க

    பதிலளிநீக்கு
  2. ////நேஷனல் ஸ்பிரிட்டும்
    தேசத்தின் வளமும்///


    ...... கவிதைகள் நாட்டு நடப்பை சொல்லுதுங்க. இதற்காகவே, சாத்தூர் ஷண்முக நாடார் கடை கருப்பட்டி மிட்டாய், ஒரு பெட்டி உங்களுக்கு கொடுக்கலாம். :-)

    பதிலளிநீக்கு
  3. நச்...நச்..ன்னு இருக்குங்க மூணும்....

    பதிலளிநீக்கு
  4. மூன்றுமே ரசிக்க வைத்தன..

    பதிலளிநீக்கு
  5. நல்லா உரைக்கிறது.
    சம்பந்தப்பட்டவுகளுக்கு தெரியனும்.

    பதிலளிநீக்கு
  6. ரொம்ப சரியா சொல்லிருக்கீங்க. :(

    பதிலளிநீக்கு
  7. முதல் கவிதை கனல் தெரிக்குது.சூப்பர்ங்க.நீங்க சாத்தூரா?நான் கோவில்பட்டி.. :)

    பதிலளிநீக்கு
  8. நம்ம ஆளுங்களுக்கு தேசபக்தின்னா கொடிக்கு salute பண்றதும்,கிரிக்கெட் ல இந்தியா ஜெயிக்கணும்னு வேண்டுறதும் தான்.

    பதிலளிநீக்கு
  9. வெளிநாட்டில் இருந்துகொண்டு இந்தியவைப் பத்தி கவலைப்பட உனக்கு என்ன உரிமை இருக்கிறது..

    பதிலளிநீக்கு
  10. @ நேசமித்ரன
    நன்றி சார் வருகைக்கும் வாழ்த்துக்கும்
    @ பத்மா
    நன்றி
    @கே.ஆர்.பி. செந்தில்
    நன்றி.
    @சை.கொ.ப
    நன்றி நண்பா தொடர் ஆதரவுக்கு.
    @ புலவன் புலிகேசி
    நன்றி புலவரே
    @ சித்ரா
    நன்றி டிச்சர் கருப்பட்டி மிட்டாய்கு
    @ பிலாசபி பிராபகரன்
    வாங்க நீங்க நம்மூரா !
    @ க.பாலாசி
    நன்றி பாலாசி
    @ரிஷபன்
    நன்றி ரிஷ்பன்
    @மயில்ராவணன்
    நன்றி மயில்
    @விக்னேஷ்வரி
    நன்றி விக்னேஷ்வரி
    @இல்லுமினாட்டி
    ஆமாங்க நான் சாத்தூர்தான். நன்றி
    @ அன்புடன் மலிக்கா
    நன்றி மலிக்கா
    @ரமேஷ்
    நான் இந்தியன் என்ற உணர்வு போதும் நண்பா.

    பதிலளிநீக்கு
  11. ரொம்ப நல்லா இருக்குங்க...

    பதிலளிநீக்கு
புதியது பழையவை

தொடர்பு படிவம்